நடமாட்டக் கட்டுப்பாடு தினங்களில் பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும்!

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன.
இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
முடிவெட்டுவதில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாகாண கல்வி அமைச்சு !
கொரோனா அபாயம் நீங்கவில்லை - மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள து சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிர...
மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கமே காரணம் - மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெ...
|
|