நடமாடும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் தராசுகளை சோதனைக்குட்படுத்த விசேட நடவடிக்கை!

நடமாட்டக் கட்டுப்பாடுக் காலப்பகுதியில், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் தராசுகளை சோதனைக்கு உட்படுத்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கை, பதுளை மற்றும் மஹியங்கனை பகுதிகளை மையப்படுத்தி நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவான வர்த்தகர்கள், தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இது மக்களின் தவறல்ல : அதிகரித்த மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரச...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!
|
|