நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!

யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத்திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒருதொகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டன என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஓர் உந்துருளியும் மீட்கப்பட்டது. களவாடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
இலங்கைக்கு வந்துள்ளது இந்தியக் குழு!
திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !
வாக்குறுதிகளை வழங்குவது போன்றே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றோம் - பிர...
|
|