நகர்புறங்களை விட கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Friday, November 26th, 2021

நாட்டில் நகர்புறங்களை விடவும் கிராமங்களில் கொரோனா பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் நகர்புறங்களிலேயே இந்த வீதம் அதிகளவில் காணப்பட்டதாகவும், எனினும் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறி பொதுமக்கள் அதிகளவில் கூடுவதே இதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடந்து கொண்டால் மாத்திரமே நாட்டினை முடக்காமல், அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: