தோழர் வள்ளுவனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

சாலை விபத்தில் அகாலமரணத்தை தழுவிய தோழர் வள்ளுவன் (வேலுப்பிள்ளை மகேந்திரனின்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை மாவடிப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் தோழர்கள் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.
வட்டுக்கோட்டை மாவடியை வசிப்பிடமாகக் கொண்ட வேலுப்பிள்ளை மகேந்திரன் ( தோழர் வள்ளுவன்) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் உறுப்பினராக நீண்டகாலமாக இருந்ததுடன் அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மக்களுக்காக சேவையாற்றியதுடன் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளராகவும் பணியாற்றியவர்.
இந்நிலையில் கடந்த 27.05.2018 அன்று வட்டுக்கோட்டை மாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் நேற்றையதினம் (28) இறைபதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|