தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளருமான தோழர் வசந்தன் ( மாமா ) அவர்களின் தாயார் அமரர்’ புதன் அன்னம்மாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
தென்மராட்சி கலியாணக்குளம் எழுதுமட்டுவாழைச் சொந்த இடமாக கொண்ட அமரர் பூ. அன்னம்மா வயது மூப்பின் காரணமான உடல்நலக் குறைவு காரணமாக சிறிது காலம் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் புதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் பிரதேச பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினர்
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|