தோழர் முரளி அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Wednesday, January 9th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் முரளி அவர்களின் தாயார் செல்வராசா சிவஞானயோகேஷ்வரி அவர்கள் இன்றையதினம் (9)காலமானார்.

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்துடன் அவருக்கு எமது இதய அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.

அத்துடன் அன்னாரது இழப்பால் துயரம் சுமந்து தவிக்கும் உறவினர்கள் , நண்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்.

காலம்சென்ற செல்வராசா சிவஞானயோகேஷ்வரி அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(09) காலமானார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளையதினம் (10) பிற்பகல் 1 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: