தோழர் திலீபனின் மாமனாரது மறைவு குறித்து அமைச்சர் டக்ளஸ் அனுதாபம்!

Monday, January 10th, 2022

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான தோழர் திலீபன் அவர்களின் மாமனாரான சிலம்பரம் சக்திவேல் அவர்கள் கடந்த 09.01.2022 அன்று உயிரிழந்த துன்பச் செய்தி மன வேதனையை ஏற்படுத்துகின்றது என கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வவுனியா மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை திறம்பட ஒழுங்கமைத்து மக்களின் துயர் துடைக்கும் எமது பணியை முன்னெடுக்கும் தோழர் திலீபன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருக்கும் இத்துயரத்தில் பங்கு கொள்வதுடன் அன்னாருக்கு எமது அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: