தோழர் திலக் அவர்களின் துணைவியாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!

Tuesday, April 30th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும் கட்சியின் சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக் அவர்களின் அன்பு மனைவி அமரர் திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்கள் இன்றையதினம் காலமானார்.

ஈழ விடுதலை போராட்டத்தின் மூத்த பெண் போராளியும் ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினருமான அமரர் திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி உடல் நலக் குறைவு காரணமாக இன்றையதினம் சுவிஸ்சர்லாந்தின் சூரிச் நகரில் காலமானார்.

அன்னாரின் பிரிவுத்துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் பங்கெடுப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Related posts: