தோழர் தவநாதனின் தாயாராது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, January 11th, 2022

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளையின் பூதவுடலுக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை கடந்த நேற்றையதினம் காலமானார்..

இந்நிலையில் இன்றையதினம் இறுதிக்கிரியைகள் நடைபெற்றிருந்த நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தலைமையிலான யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.

முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது என கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது அஞ்சலி குறிப்பில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கான அபிலாசைகளை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக தன்னை அர்பணித்து செயற்படுகின்ற தோழர் தவநாதன், எமது அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக சிறப்பான சேவையை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி வருகின்றார் என்றும் தமிழ் மக்கள் சார்பான சிந்தனையாளனாகவும், அர்ப்பணிப்புமிகு செயற்பாட்டாளராகவும் தன்னை நிரூபித்து வருகின்ற தோழர் தவநாதனின் தாயாரின் இழப்பு, தோழர் தவநாதனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாது சேவையிலிருந்து நிறுத்த வேண்டும் -த...
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் - போக்...
புதிய கல்விக் கொள்கை தயாரிப்பின்போது இலங்கைச் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை - கல்வி அமை...