தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Sunday, December 11th, 2016

தோழர் குகன் அவர்களது மாமியர் காலஞ்சென்ற திருமதி ஞானாம்பிகை சுப்பிரமணியத்தின் துயரில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பங்கெடுப்பதுடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

பிரான்சில் நேற்றுமுன்தினம் (9) காலமான திருமதி ஞானாம்பிகை சுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

யாழ். வேலணை மேற்கு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பிரிவால் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் துயருற்றிரக்கும் குடும்பத்தினருக்குத் உற்றார் உறவினர்களுக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரிலும் தொலைபேசியூடாகவும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தள்ளார்.

காலஞ்சென்ற அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரான்ஸ் கிளையின் முக்கியஸ்தரான குகேந்திரனின் (குகன்) அவர்களது மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை பிரான்சிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

01222

Related posts: