தோழர் அன்பு அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு நிர்வாக செயலாளரும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (அன்பு) அவர்களின் தாயார் அமரர் இராசரத்தினம் இராசமணி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
வயது முதுமை காரணமாக இன்றையதினம் காலமான அமரர் இராசரத்தினம் இராசமணி அவர்களது பங்களா லேன், மல்லாகம் என்னும் முகவரியிலுள்ள இல்லத்திற்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைபர் வட்சப் ஊடாக வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்களை குறிவைக்கும் காவாலிகள் – அவதானமாக இருக்குமாறு எச்ச...
நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் – இதுவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும் – பிரத...
பயணங்களை குறைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் - சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயி...
|
|