தோட்ட தொழிலாளர்களத 2, 500 ரூபா ஊதிய உயர்விற்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, July 21st, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரத்து, 500 ரூபா ஊதிய உயர்வை வழங்குவதற்கு அந்த தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளுக்கு நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்தார்.
மாதாந்த வேதன உயர்வை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரத்து, 500 ரூபா ஊதிய உயர்வை வழங்குவதற்கு சந்தையில் தேயிலையின் விலை குறைந்துள்ளமையினால் குறித்த பிரதேசங்களில் காணப்படுகின்ற பெருந்தோட்டத்துறை, கம்பனிகளுக்கு பல்வேறு தடைகள் காணப்படுகின்றன.
இந்த நிலையினை கருத்திற்கொண்டு குறித்த அதனடிப்படையில் பிரதேச பெருந்தோட்டத்துறை கம்பனிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் ஊடாக அரச வங்கியின் வழியாக கடன் உதவிகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் திறைசேரியின் மூலம் ஒப்புதலை வழங்க நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,
Related posts:
|
|