தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்கும் பொறுப்பு பணியாளர்களுக்குரியது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

Saturday, July 1st, 2017

தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கைபணியாளர்களுக்கே இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்று அங்கு சென்ற 38 பேருக்கு விமான ரிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் தலதா அத்துக்கோரள உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் , 2015ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் 85 இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைத்திருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில் ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் நாடு திரும்பாமல் சடட்விரோதமாக அங்கு தங்கியிருப்பதனால் இஸ்ரேலில் இலங்கைக்கான விவசாய தொழில்துறைக்கான சந்தர்ப்பம் இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர்  இதனால் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் சட்டவிதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமென்றும் அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள இந்நிகழ்வில் சுட்டிக்காட்டினார்.

Related posts: