தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாடுகளிலுள்ள, இலங்கையருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க அறிவிப்பு!

Saturday, April 30th, 2022

தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பனவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இதற்காக மாகாண சபை, பிரதேச சபை மூலம் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க கூறியுள்ளார்..

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக  மேலும் தெரிவிக்கையில், நாடு இன்று எதிர் நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரினை இலங்கைக்கு அனுப்புவதனை ஊக்குப்படுத்தும் வகையில் அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: