தொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை!

Tuesday, July 17th, 2018

இலங்கையின் தொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கும் வலுவூட்டுவதற்குமாக இன்சி சிமெந்து நிறுவனமும், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் அமைச்சர் ரவீந்திர சமவீரவும், இன்சி சீமெந்து இலங்கை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி நந்தண ஏக்கநாயக்கவும் அண்மையில் கைச்சாத்திட்டனர்.
ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், செயற்றிறன் மிக்க அபிவிருத்தி ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றில் பாதுகாப்பான முறையிலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மூலம் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது இதன் நோக்கமாகும்.

Related posts: