தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது – தொழில் வழங்குனர்களிடம் தொழில் அமைச்சர் நிமல் கோரிக்கை!

Sunday, January 3rd, 2021

தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது. கொரோனா வைரஸை சிறந்த திட்டத்தின் மூலமே வெற்றிகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அநேக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.

உலகின் முன்னணி நாடுகளும் இதில் அடங்கும். இந்த நிலையில் நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: