தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க ‘ஊடகக் கற்கை நிறுவனம் – அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நடவடிக்கை!

Wednesday, March 17th, 2021

நவீன உலகிற்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில்முறை திறன்களைக் கொண்ட ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஊடக ஆய்வு நிறுவனமொன்றை அமைக்க வெகுஜன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளதுதாக ஊடக அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் என்ணக்கருவான சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்தின் கீழ் ஊடகக் கற்கைக்கான உயர் கல்வி நிறுவனமாக இது ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மிகவும் திறமையான ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக சர்வதேச தரத்திற்கேற்ப அரச அனுசரணையுடன் இந்தக் கல்வி நிறுவனம் உருவாக்கப்படு என்றும் தெரிவித்துள்ள அமைச்சர்  இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: