தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு அறிவிப்பு!
Friday, June 3rd, 2022தொழில் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாவட்ட அலுவலகங்கள், வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், தொழில் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு, இடையூறு ஏற்படாது என தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஊழியர் சேமலாப நிதிய பணிகளுக்கு இடையூறோ அல்லது தாமதமோ ஏற்படாதிருப்பதை தாங்கள் உறுதிப்படுத்துவதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தின் கொழும்பிலுள்ள பிரதான காரியாலயமும், மாவட்ட அலுவலகங்களும் திங்கட்கிழமைமுதல் வியாழக்கிழமை வரையில் மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், கடமைக்காக அலுவலகத்திற்கு சமுகமளிக்காமல், வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு சுற்றறிக்கை மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|