தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021

தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் போது எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது..

இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்யும்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்திற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த கட்டணம் கொவிட் தடுப்பூசிகாக அறவிடப்படும் கட்டணம் அல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: