தொழில்நுட்ப பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி மாதம் 12ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு ஜனவரி மாதத்திலேயே வெளியிடப்பட்டது. இம்முறை உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி நடைபெற்றுது. பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 மாணவர்கள் தோற்றியிருந்ததாக டபிள்யு.என்.ஜே.புஷ்பகுமார சுட்டிக்காட்டினார் .
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முன்னைய வருடங்களுக்கு அமைவாக தாமதடைந்திருப்பதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இவ்வாறான தாமதம் இடம்பெறவில்லை என்றும் தொழில்நுட்பப் பயிற்சி செய்முறைப் பரீட்சைக்கான புள்ளிகள் கணனியில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கு சில நாட்கள் செல்லுமென்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.என்.ஜே.புஷ்பகுமார கூறினார்.
Related posts:
|
|