தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Wednesday, June 20th, 2018

வடக்கு மாகாணத்தில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதி முதன்மைச் செயலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் 57 காணப்படுகின்றன. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. ஆளணியை உள்வாங்குவதற்கான வயதெல்லை ஆரம்பத்தில் 35 வயதை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு வந்தன.

அதன் பின்னர் அமைச்சரவை தீர்மானத்தின்படி தொழில் நுட்ப உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான வயதெல்லை 35 என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போட்டிப்பரீட்சை மூலம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அனுமதி மாகாண ஆளநரிடம் இருந்து பெறப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


நவம்பர் முதல் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் விநியோகம்!
ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் - பிரதமர்!
வாக்காளர் பதிவு கால நீடிப்பு!
நியமனம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் நீதி கிடைக்க நடவடிக்கை - ஜனாதிபதி!
ஆவா குழுவின் முக்கியஸ்தர் மல்லாகம் நீதிமன்றில் சரண்!