தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் – அமைச்சர் பைசர் முஸ்தப்பா!

Monday, December 11th, 2017

உள்ளுராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் பல தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த திருத்தம் முன்வைக்கப்படுகின்றது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: