தொழில்களை தேடிக்கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்க்கல்வி முறைமையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம் – ஜனாதிபதி!

Saturday, May 16th, 2020

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் அவர் இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: