தொழில்களை இழகக்க நேரிடலாம்: நாடு திரும்புவது குறித்து சிந்தித்து முடிவெடுங்கள் – வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு வெளியுறவுத்துறை செயலாளர் அறிவுரை!

Monday, May 18th, 2020

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கொரோன வைரஸ் காரணமாக இலங்கைக்கு திரும்பி வருவது தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் – கொரோன வைரஸ் காரணமாக சிலர் தொழில்களை இழந்திருக்கலாம். அவர்கள் நிச்சயமாக நாட்டுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. சிலர் விடுமுறையில் இலங்கைக்கு வர விரும்பலாம். இதன்போது அவர்களின் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.

மாணவர்களை பொறுத்த வரையில் அவர்களும் தமது கல்வியை இடையில் விட்டு அல்லது பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு வருவதை பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த விடயத்தில் கட்டாயச் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு செயற்படுமாறு ஆரியசிங்க கோரியுள்ளார்

இதேவேளை கொரோனா பரவலை அடுத்து 38 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: