தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபா அறவிடப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபாவினை அறவிட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய மேலும் தெரிவிக்கையில் –
குறித்த கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளும் நபர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர் அவர் செல்லும் நாட்டிற்கு அமைய தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொழிலுக்காகதான் வெளிநாடு செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தடுப்பூசி வேலைத்திட்டதில் இவர்களை இணைத்துக் கொள்ள முடியாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலி நாட்டிற்கு இலங்கை இராணுவக் குழு பயணம்!
ஐ.நா மனித உரிமைகள் 37ஆவது கூட்டத்தொடர் இன்று!
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாம...
|
|