தொழிலாளர் தினத்தை பிற்போட்டமைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

Saturday, March 31st, 2018

எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி வெசாக் போயா தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை தொழிலாளர் தினத்தினை மே 07ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

மேற்குறித்த தீர்மானத்தினை உலகில் எந்தவொரு பெளத்த நாடும் எடுத்ததில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் உரிமையைப் போன்றே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடவும் உரிமை உண்டு எனவும் வெசாக் தினத்திற்கு உச்ச மதிப்பளித்து, தொழிலாளர் தினத்தினை பிற்போடாதிருக்க வேண்டும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: