தொழிற்சங்க நடவடிக்கை கைவிட்டனர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள்!

Friday, October 7th, 2016

இரண்டாவது தடவையாகவும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தினர் ஆரம்பித்திருந்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடுவதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை இரவு 8 மணிமுதல் 10 மணிவரை இடம்பெற்றதாகவும், இதன்போது தங்கள் கோரிக்கைகளுக்கு அமைச்சரினால் உடனடியாக சில சாதக முடிவுகள் எடுக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரகந்த குறிப்பிட்டார்.

அமைச்சரின் வாக்குறுதிக்கு அமைவாக தங்கள் தரப்பிலும் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அவர் கூறினார். அதேநேரம் அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை தமது சங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

IMG_6131-M_0

Related posts: