தொழிற்சங்க நடவடிக்கையில் வனவளத்துறை அதிகாரிகள்!

வனவளத்துறை அதிகாரிகள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, அனைத்து இலங்கை ஒன்றிணைந்த வனவள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
வனவளத்துறை அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்படாமைக்கு எதிராகவே இரண்டு வலையங்களின் வனவளத்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
கந்தளாய் – திருகோணமலை வனவள அதிகாரிகள் இருவர் மீது கடந்த தினம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாவெலி வலையம் மற்றும் திருகோணமலை வனவள வலையம் ஆகியவற்றில் பணியாற்றுகின்ற வனவளத்துறை அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு 45.27 மில்லியன் டொலர்!
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் - இராணுவ தளபதி சந்திப்பு!
இரண்டாவது தடவையாகவும் நெடுந்தீவு பிரதேச சபை உதவித்தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
|
|