தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்நோக்கத் தயார் – அமைச்சர் ராஜித!

Wednesday, May 3rd, 2017

எந்தவகையான தொழிற்சங்கப் போராட்டங்களையும் எதிர்நோக்கத் தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம்  நடத்தப்பட உள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் ஏனைய சில தொழிற்சங்கங்களும் மேற்கொள்ள உள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார்.அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.வெசாக் பௌர்ணமியின் பின்னர் போட்டங்கள் நடத்தப்படும் என வைத்திய அதிகாரிகள் சங்கமும் கூட்டு எதிர்க்கட்சியும் கூறி வருகின்றன.

இது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் பார்வையிட முடிந்தது. இந்த நடவடிக்கையானது முழுமையாகவே அரசியல் சார்ந்த ஓர் நடவடிக்கையாகும்.அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூட்டு எதிர்க்கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. எவ்வாறெனினும் இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என அமைமச்சர் தெரிவித்துள்ளார்