தொழிற்கல்வியில் இலவசக் கல்வி : இந்தஅரசாங்கமே உறுதி செய்தது – ஜனாதிபதி

தொழிற்கல்வியில் இலவசக் கல்வியின் உரிமையை சமகால அரசாங்கமே உறுதி செய்திருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி பயிற்சிகளை பெறவேண்டியிருந்தபோதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அவ்வாறான கட்டணம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலவச கல்வியை பலப்படுத்துவதற்கும், நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழிற்பயிற்சியை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதுடன், அதற்கான முதலீடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
புதிய நடைமுறையில் பிணை முறிப்பத்திர விற்பனை - மத்திய வங்கி!
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்திய...
|
|