தொல்பொருள் தகவல் நிலைய நிர்மாணப்பணிகள் குறித்த கலந்துரையாடல்!

Wednesday, August 16th, 2017

பொலன்னறுவை புதிய நகரத்தில் நிர்மாணிக்கப்படும் தொல்பொருள் நிலையம் மற்றும் தகவல் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.’எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலன்னறுவை நகரத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து அடுத்த தலைமுறைக்கு தெளிவை வழங்குவதற்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த தொல்பொருள் நிலையமும் தகவல் மத்திய நிலையமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி;, இப்பணிகளை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கினார். இந்த கலந்துரையாடலில் உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டீ. சுவர்ணபால, தேசிய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சனுஜா கஸ்தூரி ஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts: