தொல்பொருளியல் பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார விவகார அமைச்சினல் வேலையற்ற தெல்பொருளியல் பட்டதாரிகளை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அமைச்சினால் தொல்பொருளியல் விசேட பட்டத்தில் சித்தியடைந்துள்ள அல்லது தொல்பொருளியலை ஒரு பாடமாக பயின்று பல்கலைக்கழகத்தில் சாதாரண பட்டத்தை பெற்று இதுவரை தொழில் ஒன்றிலும் ஈடுபடாது வேலையற்றுள்ள பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. இதற்குரிய மாதிரிப்பத்திரத்தினை Cultural.gov.lk என்ற இணைய தளத்தில் பெற்று எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்பாக மேலதிக செயலாளர் (நிர்வாகம், நிலைய நிர்வாகம், மற்றும் வெளிநாடுகள்) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகாரங்கள் என்று முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல் பொருளியல் துறையின் மனித வளத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான தொல்பொருளியல் பட்டதாரிகளை இனங்கண்டு பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|