தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ள சலுகை!

Tuesday, April 7th, 2020

இணைய வசதிகளை முடிவுமானளவு நாட்டு மக்களுக்கு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

கொவிட் 19 செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிற்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது..

இந்த சந்திப்பில் டயலொக், மொபிடெல், ஹச், ஏயார் டெல், எஸ்.எல்.டி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன்போது கொவிட் 19 பிரச்சினை இலங்கையில் வலுவடைந்து வருகின்ற நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டணம் செலுத்தப்படாத தொலைபேசி இணைப்புகள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை துண்டிக்கப்படாது என இந்த சந்திப்பின் போது தொலைபேசி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என தெரியவருகின்றது.

Related posts: