தொலைபேசி கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்?

நாட்டின் புதிய வற் வரி மீளாய்வின் காரணமாக தொலைபேசிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுவந்த 25 சதவிகித வரி 42 சத வீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைபேசிகளுக்கு தற்சமயம் அறவிடப்படும் தொலைத்தொடர்பு வரியான 25 சதவீதம் எதிர்வரும் மே மாதம் முதல் மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதுடன் மேலும் இரண்டு சதவீதம் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியாகவும் அறவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சகல வகையான தொலைபேசிகள், வீட்டுத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் இந்தப் புதிய வரிக்கு உட்படுத்தப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம் - வெளிநாட்டு உறவுகள் அமைச்சு!
தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை - நாடாளுமன்றத்தில...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - இந்திய மீனவர்கள் 19 பேர...
|
|