தொலைபேசி அழைப்பை ஏற்காத இலங்கை தூதர் திரும்ப அழைப்பு!

Monday, September 17th, 2018

தொலைபேசி அழைப்பை ஏற்கத் தவறிய ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதரை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்ப அழைத்துள்ளார்.

 பிரியா விஜசேகர என்ற அந்த பெண் தூதரையும், மற்ற 5 தூதரக அதிகாரிகளையும் அதிபர் சிறீசேனா கடந்த வாரம் பல முறை தொலைபேசியில் அழைத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, தூதரையும், 5 அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர் என்ன காரணத்துக்காக தூதரைத் தொடர்பு கொள்ள முயன்றார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

 தூதர் திரும்ப அழைக்கப்பட்டதை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தினாலும், அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

Related posts: