தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்!

Tuesday, March 31st, 2020

நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக மக்களின் தொலைபேசி, இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி இணைப்புகளை துண்டிக்காது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, தொடர்புசாதன சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

இது குறித்து தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு டுவிட்டர் பதிவில் இதனை அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தாத காரணத்தினால், இணையத்தளம் மாத்திரமல்லாது தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகைகளையும் வழங்குவதில்லை என குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே குறித்த ஆணைக்குளு இவ்வாறு தெரிவித்துள்ளது

Related posts: