தொலைத்தொடர்பாடல் கட்டணங்களுக்கும் கால அவகாசம் – தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு!

Sunday, March 22nd, 2020

பாவனையாளர்கள் தொலைத்தொடர்பாடல் சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களிடம் சரியான தகவல்களைக் கொண்டு சென்று சேர்ப்பது அத்தியாவசியானதாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தற்போது தகவல் வழங்கள் சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆகவே, அனைத்து டெலிகொம் மற்றும் கைத்தொலைபேசி வலையமைப்பு சேவைகள் (Telecom, Mobile), தொலைக்காட்சி வலையமைப்பு வழங்கல் சேவைகளும் (Cable TV operators) பாவனையாளர்கள் உரிய பாவனைக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லையை நீட்டிக்க வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

Related posts: