தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே இராஜினாமா!

Tuesday, August 15th, 2017

இலங்கை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவுறுத்தியதாகவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மூலம் தமக்கு கிடைத்ததாகவும் முகுந்தன் கனகே குறிப்பிட்டுள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முகுந்தன் கனகே அண்மைய காலமாக கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட நிலையில், எவ்விதமான மோசடிகளுடனும் தனக்கு தொடர்பில்லையென அவர் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, கடந்த நாடாளுமன்ற அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: