தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிபுணத்துவ வைத்தியர் சுதத் சமரவீரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுதத் சமரவீர டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளராக நிபுணத்துவ வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
தொற்று விஞ்ஞானப் பிரிவு சரியான தரவுகளை வெளியிடுவதில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இந்த அவசர இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுறுதி - 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை...
இன்று 3 மணிமுதல் புதிய களனிப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!
22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!
|
|