தொற்றுநோய்: ஒரு மாதத்தில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Monday, November 26th, 2018உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் காரணமாக 2,138 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 மக்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தொற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 539 பேர். இவர்களில் பலியான 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானவர்கள் வைரல் ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் முதல்வர், பேரவைத் தலைவருக்கு ஆளுநர் அவசர கடிதம்!
கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் உத்தரவு!
விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் - பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
|
|