தொற்றா நோய் தொடர்பில் – இலங்கையின் செயற்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

Friday, October 27th, 2017

தொற்றாநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சர்வதேச மகாநாடு உருகுவேயிலுள்ள மொன்டிரியோ தலைநகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 18 நாடுகளை சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மகாநாட்டில் கலந்துகொண்டனர்.

இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொற்றாநோயை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை இதன்போது விபரித்தார்.

சுகாதார சேவைக்காக இலங்கை அரசாங்கம் மொத்த உற்பத்தியில் 3 சதவீத்திற்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கீடுசெய்தது. 2020 ஆம் ஆண்டளவில் இதனை 4.5ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை வளர்ச்சியில் தொற்றாநோயும் பெரும் சவாலாக இலங்கைக்கு அமைந்துள்ளது. இலங்கை வைத்தியசாலைகளில் இடம்பெறும் உயிரிழப்புக்களில் 60 சதவீதமானவை தொற்றாநோயின் காரணமாகவே இடம்பெறுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதர போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்;டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த தொற்றா நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பின் பிரதிநிநிதிகள் இதன்போது பாராட்டு தெரிவித்தனர்

Related posts: