தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – சுகாதார அமைச்சர்!
Friday, May 26th, 2017தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்டு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன வலியறுத்தியுள்ளார்.
இந்த அமைப்பின் 70வது மாநாடு சுவிட்ஸ்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், நிலைபேறான அபிவிருத்திக்காக மக்கள் ஐக்கியப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இலங்கை அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்த மொத்தத் தேசிய உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கும் மேலான தொகையை ஒதுக்கீடு செய்கிறதென அவர் குறிப்பிட்டார்.
முப்பது வருடகால யுத்தத்தைத் தொடர்ந்து இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது சவாலாக மாறியுள்ளது. இந்தத் துறையில் மோசடிகளும், வீண் விரயமும் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் மலேரியாவை கட்டுப்படுத்தியமை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. ர்1N1 நோயைக் கட்டுப்படுத்தும் சீரான திட்டம் அமுலாகின்றதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தொடர்பிலும் அமைச்சர் உரையாற்றினார். இதில் புலம்பெயர் சுகாதார நெருக்கடிகள் பற்றி அவர் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|