தொற்றாநோயை 5 சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Monday, March 13th, 2017

தொற்றா நோயை 2020ம் ஆண்டளவில் ஐந்து சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டமாகும்; என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் பயாகல ராஜித சேனாரட்ன மைதானம் மற்றும் மக்கொண விளையாட்டு மைதானத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையங்களை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம்கலந்துகொண்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

தொற்றா நோயை தடுக்கும் நோக்கில் தேகப் பயிற்சி மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சுகாதார அமைச்சு ஒரு பயிற்சி நிலையத்திற்காக 20 மில்லியன் ரூபா உபகரணங்களை வழங்கியுள்ளது.

இலங்கையைப் போன்றே உலக நாடுகளிலும் தொற்றா நோயாளர்கள் இருக்கின்றனர். இந்த நோய் தொடர்பில் பெரும் சவால் எதிர்நோக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரில் 70 சதவீதமானோர் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.  இதற்கு முக்கிய காரணம் புகைத்தல், போதைப்பொருள் பாவனை, உப்பு, சீனி, மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை பெருமளவில் உணவில் சேர்த்துக் கொள்வதே இதற்கான காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காக புகையிலை தயாரிப்புக்களை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து 90 சதவீதமான வரியை அறிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது புகைத்தல் மற்றும் மதுபாவனை காணரமாக நாட்டில் வருடமொன்றுக்கு 35 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 5சதவீதமானோர் சிறுவர்களாவர் என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சில்லறையாக சிகரெட்டுக்களை விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கான ஆவணம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளதாகவும் இது அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பக்கெற்றுகளாகவே சிகரெட் விற்பனை செய்ய முடியும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குடும்ப வைத்தியர் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு வைத்தியரின் கீழ் 5000 பேர் பதிவு செய்யப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

சீனி பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வர்ண அடையாள முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இனிப்பு பண்டங்களின் தயாரிப்புக்கு இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 10 சதவீதத்திற்கும் குறைவான பானங்களின் தயாரிப்புக்கு பல்லின நிறுவனங்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: