தொண்டர், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஆங்கிலபாட ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றி வரும் ஆங்கிலபாட தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கவேண்டும் என்று வடக்கு மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாகாணசபையின் 106 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்விலேயே குறித்த பிரேரணையை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்குமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆங்கில ஆசிரியர்களுக்கும், ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். வடக்குமாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்குக் காணப்படுகின்ற வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டும், அவர்கள் ஆற்றிய சேவைகளைக் கருத்திற் கொண்டும் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கையை வடக்கு மாகாண கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு ஊடாக உரியமுறையில் எடுக்கவேண்டும் என்று அந்த பிரேரணையில் தெரிலிக்கப்பட்டுள்ளது.
.
Related posts:
|
|