தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்று நேர்முகத்தேர்வு!

Thursday, April 19th, 2018

கடந்த மாதம் நியமனம் வழங்கப்படாது தவறவிடப்பட்ட தொண்டர் ஆசிரியர்களை இன்று நேர்முகத்தேர்வுக்காக கொழும்பு வருமாறு மத்திய கல்வியமைச்சு கடிதங்கள் அனுப்பியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராட்சியின் கையொப்பத்துடன் அழைப்புக் கடிதங்கள் தொண்டர் ஆசிரியர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வின் போது தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றத் தொடங்கிய காலத்தை உறுதிப்படுத்தும் முகமாக சம்பவத்திரட்டினை உறுதிப்படுத்தி சத்தியக்கூற்று சமர்ப்பித்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஜி.சி.ஈ. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் என்பவற்றை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலருக்கு இக்கடிதம் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது.

Related posts: