தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!

Tuesday, December 12th, 2017

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஸ்கெலியா ௲ சாமிமலை ௲ ஒல்ட்டன் பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஏற்கனவே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ் உட்பட 4 பேர் கைதாகி இருந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. அவர்கள் மீண்டும் எதிர்வரும் 2018ம் ஆண்டு 4ம் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.

Related posts: