தொடர் மழை – வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழையினால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மழையினால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, வெசாக் பண்டிகைக்கு தானம் வழங்கப்படும் விகாரைகள் முதல் நாள் வரை பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தானம் வழங்குவதில் குறைபாடு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சித்த வைத்திய பயிற்சி நெறியை ஊக்கப்படுத்த முயற்சி!
புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமற்றது!
நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது!
|
|