தொடர் மழை: யாழ் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 141 பேர் பாதிப்பு!

Sunday, November 12th, 2017

கடும் மழை பொழிவதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 518 குடும்பங்களில், 9 ஆயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் யாழ். மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் 643 குடும்பத்தினை சேர்ந்த 2 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.கடும் மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் தற்காலிகமான வீடுகளில் வசிக்கும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை, நாட்டைச்சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் காற்றானது மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.இது தொடர்பில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை, இன்று  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts: