தொடர் காச்சலால்: வவுனியா வைத்தியசாலையில் பெண் மரணம் – கொரோனாவா சந்தேகத்தில் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு !

Thursday, April 2nd, 2020

வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் மரணமடைந்த பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காச்சல் காரணமாக நேற்றையதினம் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தெற்கு இலுப்பைக்குளத்தை சேர்ந்த 56 வயதுடைய கலாராணி என்பவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உடனடி மருத்துவ சேவையினை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இன்று காலை மரணமடைந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts: